நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் முன்.பாஜகவினர், நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலையில் தோண்ட பட்ட பள்ளங்கள் முறையாக சீர் செய்யாததால்.சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள்,நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்திற்கு ஆட்படுவதை தடுப்பதற்கு, மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோசம் எழுப்பி ஆர்பாட்டம் நடத்தினர்.
பாஜக_வின் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, முன்னாள் நகராட்சி தலைவர் மீனாதேவ் உட்பட கட்சியின் பல்வேறு பொருப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி உட்பட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து பேரூந்துகளில் ஏற்றிச் சென்றனர்.