நாடு முழுவதும் 75வது சுதந்திர தினவிழா படு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றி அந்ததந்த நிறுவன தலைமை அதிகாரிகள் மூவர்ண கொடியை ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினர். சுதந்திர திருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் ஆலோசனையின்படி சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜாமணி மற்றும் பக்கீர் பீர் முகமது தலைமையில் அரண் அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவில் அனைத்து அரண் நிர்வாகிகள் மயோபதி டேனியல், சு.கார்த்திக், மதியரசி, தி. அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.