• Thu. Apr 25th, 2024

மத்திய அரசின் தினம்,தினம் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்து…

Byadmin

Jul 26, 2021

காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை அமைப்பு பிரிவின் மாநிலத்தலைவர். மகாத்மா சீனிவாசன் தலைமையில் கடந்த 13_ம் தேதி.பிரதமர் மோடி அவருக்கு 56″மார்பகம் என அறிவித்ததின் அடையாளமாக. 56_சைக்கிள்களில், மகாத்மா சீனிவாசன் உட்பட 52 ஆண்கள்,4_ங்கு பெண்கள் பங்கேற்ற சென்னைகன்னியாகுமரி நோக்கி சைக்கிள் பயணம் மூலம் மத்திய அரசுக்கு வைத்துள்ள.பெட்ரோல், டீசல், எரிவாயு.விலையை குறைக்க வேண்டும் என்ற கோசத்துடன்.செங்கல் பட்டு,திண்டிவனம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக.900ம் மைல் பயணத்தை 11நாட்கள் சைக்கிள் பயண குழுவினர் இன்று (24.07.2021)முன் இரவு கன்னியாகுமரி வந்தனர்.

இந்தியாவின் தென்கோடி கன்னியாகுமரி ராஜீவ் காந்தி சிலையின் முன்.குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன்.கிழக்கு மாவட்ட பொது செயலாளர்கள் தாமஸ்,கிருஷ்ணபிள்ளை, அகஸ்தீஸ்வரம் வட்டார தலைவர் முருகேசன், தமிழக காங்கிரஸ் செயலாளர் சீனிவாசன்,ஆஸ்கர்பிரடி,சபிதா, லாரன்ஸ். சைக்கிள்கள் பயண குழுவினர் தலைவர் மாநில மனித உரிமை அமைப்பின் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

சைக்கிள் பயண குழுவினருக்கு.நாங்குநேரி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ரூபி மனோகர் நினைவு பரிசு வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்.

பெட்ரோல்,டீசல், எரிவாயு கட்டணத்தை மத்திய அரசு கூறைக்க வேண்டும் என்ற கோரிக்கை பயண குழுவினர் தலைவர் மகாத்மா சீனிவாசனுக்கு,குமரி கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் இராதகிருஷ்ணன் நினைவு பரிசாக பெரும் தலைவர் காமராஜர் வாழ்க்கை பயணம் என்ற புத்தகத்துடன், விவேகானந்தர் சிலையை நினைவு பரிசு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *