• Thu. Mar 28th, 2024

ஆலங்குளம் அருகே பதுங்கியிருந்த போக்சோ வழக்கில் தேடப்பட்ட புனே டிரைவர் வெளிமாநில போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு எஸ்கேப் இதனால் போக்சோ வழக்கில் தலைமறைவான டிரைவரை பிடிக்க ஆலங்குளத்தில் தங்கியிருந்த வெளிமாநில போலீசார் ஏமாற்றத்துடன் சொந்த ஊருக்கு திரும்பினர்.

Byadmin

Jul 26, 2021

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் ஜேம்ஸ் (வயது 40). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவரது வீட்டில் ஆலங்குளம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தினேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாலிபர் கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு டிரைவராக வேலை பார்த்துள்ளார். அப்போது கிறிஸ்தவ மதபோதகர் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் டிரைவர் தினேஷ் 7 வயது சிறுமியிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான புகாரின்பேரில் புனே போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் தினேஷ் புனேவில் இருந்து தலைமறைவாகி விட்டார்.
இந்த நிலையில் கடந்த வாரம் டிரைவர் தினேஷ் ஆலங்குளம் அருகே உள்ள கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருப்பதாக புனே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. புனே உதவி ஆய்வாளர் தலைமையில் 2 போலீசார் ஆலங்குளம் விரைந்து வந்தனர். கடந்த சில நாட்களாக ஆலங்குளம் தனியார் லாட்ஜில் தங்கி செல்போன் டவர் மூலம் புனே போலீசார் டிரைவர் தினேசை தேடி வந்தனர்.
புனே போலீசாரால் தினேஷ் பதுங்கியுள்ள இடத்தை சரியாக கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இன்று போலீசார் ஏமாற்றத்துடன் புனே புறப்பட்டு சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *