பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து குமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 15 நாட்களில் விலையை குறைக்காவிட்டால் பிரதமர் மோடிக்கு சேலைகள் அனுப்பும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு.
பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலைகளை மத்திய அரசு நாளுக்கு நாள் உயர்த்தி கொண்டே செல்கிறது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இவ்வாறு பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலைகளை தொடர்ந்து உயர்த்தி வருவதால் வாடகை கார் ஓட்டுநர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு செல்பவர்கள் இல்லத்தரசிகள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனிடையே பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை உயர்த்தி பொதுமக்களை கஷ்டப்படுத்தி வரும் மத்திய அரசை கண்டித்து குமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 15 நாட்களில் விலையை குறைக்காவிட்டால் பிரதமர் மோடிக்கு சேலைகள் அனுப்பும் போராட்டம் நடத்த போவதாக காங்கிரஸ் கட்சியினர் அறிவித்தார்கள். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை ராஜினாமா செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
விஷுவல் – காங் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.
பேட்டி -ராதாகிருஷ்ணன் (காங் கட்சி)