• Thu. Mar 28th, 2024

புதுக்கோட்டை அகழாய்வில் கருப்புசிவப்பு பானை ஓடுகள்!…

Byadmin

Jul 31, 2021

இன்றைக்கு தமிழகத்தில் தோண்ட தோண்ட நமது மூதாதையர்களின் தொல் எச்சங்கள் கிடைத்த வண்ணமுள்ளன. மதுரையில் கீழடிக்கு பிறகு கொற்கை அகழாய்வு பிரசித்தி பெற்று வருகிறது. இதே போல் ஏற்கனவே பழனி உள்ளிட்ட பல இடங்களில் அகழாய்வு செய்து விடுபட்ட இடங்களை அகழாய்வு செய்ய உயர்நீதிமன்றத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் வழக்கு தொடர்ந்த உள்ளனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு நடத்த உயர்நீதிமன்றத்தை நாடிய தொல்லியல் ஆய்வாளர்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது அது பற்றிய விவரம் வருமாறு.
புதுக்கோட்டை அருகேயுள்ளது பொற்பனைக்கோட்டை. இங்கு அகழாய்வு செய்தததில் கருப்பு சிவப்பு பானை ஓடுகள் இரும்பு உருக்கு ஆலைகள் இருந்ததற்கான அடையாளகள் கிடைத்துள்ளன. 2000 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட இந்த சங்க காலக் கோட்டையில் ஏராளமான தொல் பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வாளர்கள் உயர்நீதி மன்ற் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனையடுத்து அப்பகுதியில் அகழாய்வு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஒன்றிய அரசின் தொல்லியல் துறையும் அரசாணை வழங்கியது. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் இனியன் மற்றம் ஆராய்ச்சி மாணவர்கள் தொல்லியல் ஆய்வாளர்கள் அகழாய்வு மேற்கொண்டனர். மேலாய்விலேயே ஏராளமான தொல் பொருட்கள் கிடைத்தன. மேலும் அகழாய்வு செய்வதற்கு முன்பாக ஜி.பி.ஆர். கருவி மூலம் அகழாய்வு பணிகள் நடத்தப்பட்டன. இதில் கட்டுமான கட்டமைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்ளும் இன்னும் பல தொல் பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பண்பாடு நமது மண்ணுக்கடையில் உள்ளது என்பதை இந்த அகழாய்வுகள் நிரூபித்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *