தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருக்குமானால் நாம் இலக்கை அடைய முடியும் என்பதற்கு உதாரணம் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மீராபாய் சானு.
2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் தனக்கு ஏற்பட்ட தோல்வியே டோக்கியோ ஒலிம்பிக்கில் 2ம் இடத்தை பிடித்து வெற்றி பெற்று வெள்ளி பதக்கத்தை வெல்ல முடிந்ததாக மீராபாய் சானு தெரிவித்திருக்கிறார். தனக்கு உள்ள முதுகுவலியையும் பொருட்படுத்தாமல் பளுதூக்கும் போட்டியில் தேசத்தின் மானத்தையே உயர்த்தி நிமிர்த்தி பிடித்துள்ளார்.
2017ம் ஆண்டு பளுதூக்கும் போட்டியில் உலக சாம்பியன்சிப் போட்டியில் தங்கம் வென்றார்.2019ம் ஆண்டு 200 கிலோ எடை தூக்கி உலக சாதனை படைத்தார்.
தற்போது 119 கிலோ எடை தூக்கி வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவிற்கான முதல் பதக்கம் பெற்ற மீராவிற்கு பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்;த்து தெரிவித்து வருகிறார்கள். நமது அரசியல் டுடே சானலும் மீராவிற்காக நெஞ்சார வாழ்த்துக்கிறது