டோக்கியோ ஒலிம்பிக் பளு தூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு ஒரு பீட்சா பிரியர். வெற்றிக்கு பின்னர் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கையில்., ‘நீண்ட காலமாக கட்டுப்பாடு காரணமாக பீட்சா சாப்பிடாமல் இருந்த நிலையில் முதல் வேலையாக பீட்சா சாப்பிட வேண்டும்’ என கூறியிருந்தார். இதை கண்ட பீட்சா விற்பனைக்கு பெயர் பெற்ற டோமினோசு உணவக நிறுவனம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மீராபாய் சானுவுக்கு வாழ்நாள் முழுவதும் தங்களுடைய உணவகங்கள் பீட்சாவுக்கு கட்டணம் ஏற்கப்படாது என்ற வெகுமதியை அறிவித்துள்ளது டோமினோஸ் நிறுவனம்.