• Tue. Dec 10th, 2024

நெல்லையில் களைகட்டிய சுதந்திர தின விழா கொண்டாட்டம்!…

By

Aug 15, 2021

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நாட்டின் 75வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாட்டப்பட்டது. மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் மூவர்ண கொடியை ஏற்றிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சியில் சிறப்பாக பணி புரிந்தவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தார். இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையர்கள் ஐயப்பன், பாஸ்கர், சுகி பிரேமலதா, ஜெஹாங்கீர் பாஷா மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

இதேபோன்று, பாளையங்கோட்டையிலும் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாவட்ட திட்ட அலுவலர் பழனி, மாநகர காவல்துறை ஆணையர் செந்தாமரை கண்ணன், மாவட்ட எஸ்.பி மணிவண்ணன், மாநகர காவல்துறை துணை ஆணையர்கள் டி.பி. சுரேஷ்குமார், டி.சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பணியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.