

தஞ்சாவூர் அருகே புதிய பேருந்துநிலையம் அருகில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு, நள்ளிரவில் பிறந்தநாள் கொண்டாத்தில் ஈடுபட்டுள்ளனர். பிறந்த நாள் விழாவில் மதுபோதை தலைகேறி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞரை சக நண்பர்கள் ஆடைகளை கழற்றி நிர்வாணமாகி, கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். மேலும்,அப்பகுதி மக்களையும், சாலைகளில் செல்பவர்களையும் அச்சுறுத்தும் விதமாக செயல்பட்டுள்ளனர். இந்நிலையில் இளைஞர் நிர்வாணமாக பிறந்த நாள் கொண்டாடிய போது அப்பகுதியை சேர்ந்தவர்கள் இதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதுவரை இதுகுறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

