• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

கள்ளக்காதலியுடன் எஸ்கேப்பான கணவரை கைது செய்யக் கோரி மனைவி தர்ணா போராட்டம்…

Byadmin

Aug 3, 2021

திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த பெண் திவ்யா (29). இவரது கணவர் பெயர் ராஜேஸ்வரன் . இவர் அங்குவிலாஸ் அருகேயுள்ள சின்னையா நகரைச் சேர்ந்தவர். ராஜேஸ்வரன் மதுரையில் உள்ள ஐ.ஏ.எஸ். அகாடமியில் சேர்ந்து பயின்று வருகிறார். இந்நிலையில் அங்கு படிக்கும் போது அவருக்கும் மதுரையைச் சேர்ந்த நாகராணி என்ற பெண்ணிற்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நாகராணிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவர் ராஜேஸ்வரன் தனது மனைவி திவ்யாவை விட்டுவிட்டு நாகராணியுடன் குடும்பம் நடத்தி வருகிறார். மேலும் திவ்யாவை வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக திவ்யா தனது கணவர் ராஜேஸ்வரன் மாமனார் ராஜமாணிக்கம் மாமியார் ஜெயலட்சுமி ஆகியோர் மீது கடந்த பிப்ரவரி மாதம் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் காவல்நிலைய பெண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் ராஜேஸ்வரன் மற்றும் நாகராணி ஆகியோர் இருவரும் தலைமறைவாகி உள்ளனர். கள்ளக்காதலியுடன் தலைமறைவான தனது கணவரை கைதுசெய்ய வேண்டும் என்று ஜகண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நாகராணியின் கணவர் அய்யலூரைச் சேர்ந்தவர் என்பதால் தனது மனைவியை மீட்டுத்தரும்படி வடமதுரை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட காவல்த்துறைக் கண்காணிப்பாளராக சீனிவாசன் பொறுப்பேற்ற ஒரு நாளில் அவரது அலுவலகம் முன்பாக இப்படி ஒரு முற்றுகை போராட்டம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.