• Wed. Feb 19th, 2025

நான்கு வழிச்சாலை பணி தீவிரம்.. பொதுமக்களின் கோரிக்கை.. எம்.பி. நேரில் சென்று ஆய்வு.

Byadmin

Jul 7, 2021

கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலை பணிகள் விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தொகுதி எம்பி விஜய் வசந்த் சாலைப் பணிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் இன்று நாகர்கோவில் அப்டா மார்க்கெட் முதல் காவல்கிணறு வரையுள்ள நான்கு வழி சாலை பணிகளை இன்று ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ” நான்கு வழிச்சாலை பணிகள் விரைவில் முடிக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கலந்து பேசி அதற்குரிய பணிகளை துரிதப்படுத்தவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நான்கு வழி சாலையில் உள்ள ஒரு சில இடங்களில் பாலங்கள் கட்ட வேண்டி இருப்பதால் இந்த பணிகள் சற்று தாமதம் ஆகிறது. இந்தப் பாலம் கட்டும் பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு விரைவில் நான்கு வழிச்சாலை பணிகளை தொடர்ந்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னைக்கு இரண்டு ஆண்டுகளுக்குள் நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடையும் என்று அவர் கூறினார்.