• Fri. Mar 29th, 2024

தேக்கு மரங்கள் கடத்திய லாரி பறிமுதல்…

Byadmin

Jul 20, 2021

கோவையில் தேக்கு மரங்கள் கடத்திய லாரி பறிமுதல். கோவை. ஜூலை. 20- கோவையில் அனுமதியின்றி தேக்கு மரங்கள் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. கோவை புதூர் அருகே உள்ள பட்டா நிலத்தில் இருந்த தேக்கு மரங்கள் அனுமதியின்றி வெட்டி லாரியில் ஏற்றி கடத்தப்படுவதாக ஓசை அமைப்பினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் மதுக்கரை ரேஞ்சர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு ஒரு லாரியில் தேக்கு மரங்களை ஏற்றிக் கொண்டு வாகனம் அங்கிருந்து புறப்பட்டு திருச்சி ரோட்டில் உள்ள மில் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்தபோது வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற ஓசை அமைப்பினர் சிங்கானல்லுர் அருகே வாகனத்தை சிறை த பிடித்தனர. தொடர்ந்து அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் தேக்கு மரங்கள் ஏற்றப்பட்டிருந்த லாரியை பறிமுதல் செய்து மதுக்கரை வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். வனத்துறை அனுமதி இன்றி 12-க்கும் மேற்பட்ட மரங்கள் டாக்டர் ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து வெட்டி கிடைத்ததாக தெரிகிறது. சம்பவம் குறித்து வனத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *