

தென்காசி ஆலங்குளம் அருகேயுள்ள கிராமம் கல்லூத்து. இந்த ஊரைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் பொன்ராஜ் (28). இவரது மனைவி சங்கீதா (26). சங்கீதாவின் முதல் கணவர் கண்ணன் (30)இவர் வாகை குளம் பகுதியில் வசித்து வருகிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு கருத்துவேறுபாடு காரணமாக முதல் கணவர் கண்ணனை பிரிந்து 2 மாதத்திற்கு முன்பு 2 வது கணவரை பொன்ராஜை சங்கீதா திருமணம் செய்து கொண்டு கல்லூத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் பொன்ராஜ் வேலைக்குச்சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த சங்கீதாவை முதல் கணவர் கண்ணன் வெட்டிக்கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டார். இந்த தகவலறிந்து சுரண்டை ஆய்வாளர் சுரேஷ் வீரகேரளம் புதூர் உதவி ஆய்வாளர் காஜாமுகைதீன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்ந்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

