• Mon. Jan 20th, 2025

தென்கச்சி பெருமாள் நத்தத்தில் சத்துணவுக் கூடம் திறப்பு: திமுக எம்எல்ஏ திறந்து வைத்தார்:

Byadmin

Jul 20, 2021

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் தென்கச்சி பெருமாள் நத்தத்தில் ரூ.4.52 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சத்துணவு கூட திறப்பு விழா நிகழ்ச்சி ஜூலை 20 ஆம் தேதியான இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏ க.சொ.க கண்ணன் தலைமை தாங்கி சத்துணவு கூடத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில்:- விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கு மணல் குவாரி அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தேவைப்படும் இடங்களில் அமைக்கப்படும்.
ஏரி,குளங்களில் வண்டல் மண் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார் அகிலா, ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த வல்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்