• Sat. Feb 15th, 2025

தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வகாப் வழங்கினார்!…

Byadmin

Aug 6, 2021

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் தூய்மை பணிபுரியும், 51 தொழிலாளர்களுக்கு, தமிழ்நாடு தூய்மை பணிபுரிவோர் நல வாரிய அடையாள அட்டைகளை, பாளையங்கோட்டை மாநகராட்சி மண்டபத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். அருகில் தாட்கோ மேலாளர் விஜயா பாளை மண்டல உதவி ஆணையர் ஜகாகிங்கீர்பாட்ஷா, உதவி மேலாளர் தாட்கோ முருகானந்தம் உட்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.