• Thu. Mar 28th, 2024

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் முறைப்படி இன்று அர்ச்சனைகள் தொடங்கியது!…

Byadmin

Aug 6, 2021

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழ் முறைப்படி அர்ச்சனை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின் படி முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 47 ஆலயங்களில் இன்று “அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல் தஞ்சை பெரிய கோவிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பெருவுடையாருக்கு தமிழ் முறைப்படி இன்று அர்ச்சனைகள் நடைபெற்றது. இதை பக்தர்கள் உற்சாகத்துடன் வரவேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய பெரிய கோவிலில் தமிழ் முறைப்படி தான் குடமுழுக்கு நடைபெற வேண்டும்.

என கடந்த காலங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. மேலும் கருவறையிலும் தமிழ் முறைப்படி மந்திரங்கள் முழங்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு சமூக அமைப்புகளும் போராடி வந்த நிலையில், இன்று பெரிய கோவிலில் உள்ள பெருவுடையாருக்கு தமிழ் முறைப்படி அர்ச்சனை செய்யப்பட்டதை வரவேற்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழ் முறைப்படி அர்ச்சனையே விரைவாக விரைவுபடுத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *