தூத்துக்குடி அருகே பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி, முத்தையாபுரம், நாடார் தெருவைச் சேர்ந்தவர்கள் மணி மகன் தினேஷ்குமார் (26), ஈட்டும்பெரும்பாள் மகன் இசக்கிராஜா (26) இருவரும் நண்பர்கள். சென்ட்ரிங் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தொழில் தொடர்பாக இருவரும் வாகைகுளம் சென்றுவிட்டு இரவு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பைக்கை இசக்கிராஜா ஓட்டி வந்தார்.
புதுக்கோட்டை சிறுபாடு விலக்கு ரோட்டில் வந்தபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ்குமார் உயிரிழந்தார். விபத்து குறித்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.