

அரியலூர் மாவட்ட எஸ்.பி பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் கேடயம் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள
மேலக்குடியிருப்பு கிராமத்தில், ஜூலை 20ம் தேதியான இன்று “கேடயம்” திட்டம் தொடர்பாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகள் மற்றும் குற்றங்கள் எதிராக புகார் அளிப்பதற்கு ஏதுவாக தொலைபேசி எண்களும் மற்றும் அதற்கான வழிமுறைகள் குறித்தும் துண்டு பிரசுரங்களை வழங்கி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
