• Wed. Mar 19th, 2025

சேலம் ஆத்தூரில் பசுமை தாயக தினக்கொண்டடாட்டம்!…

Byadmin

Jul 31, 2021

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஒரு கிராம மே ஒன்று கூடிபசுமை தாயக தினம் வெகு சிறப்பாக கொண்டாடினர். சேலம் பாமக கிழக்கு மாவட்டம் சார்பில் பசுமை தாயக தினம் இரண்டாவது நாளாக கொண்டாடப்பட்டது. ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி கிராமத்தில் பசுமைத் தாயக தினம் பொதுமக்களுடன் கொண்டாடப்பட்டது.

பாமக வன்னியர் சங்கம் மற்றும் பசுமை தாயக அமைப்பினர் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் ஒரு கிராமமே ஒன்று கூடி பசுமை தாயக தினத்தை உற்ச்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது. பாமக மாவட்ட செயலாளர் நடராஐன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
அப் பகுதி விவசாயிகளுக்கு 183 தென்னை மரக் கன்றுகள் வழங்கப்பட்டன.
மேலும் கொய்யா நெல்லி மாங்காய் புளியமரம் என பலன் தரும் ஆயிரம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன .

இந்த மரக்கன்றுகளை பாதுகாத்து வளர்க் வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 40 ஆண்டு கால போராட்டத்தில் வன்னியர் மக்களுக்கு 10.5 விழுக்காடு பெற்றுத்தந்த இட ஒதுக்கீட்டு நாயகனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இட ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதால் பின் தங்கிய தங்களது கிராமம் எதிர்கால சந்த்திகளால் பொருளாதார வளர்ச்சியை காணும் என்ற மகிழ்ச்சியில் கொத்தாம்பாடி கிராமத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து 1000 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. அதனை கிராம மக்கள் வரிசையில் நின்று பெற்றுச்சென்றனர். மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் பச்சமுத்து மாநிலஇளைஞரணி துணை செயலாளர் ஜெயபிரகாஷ் மாவட்ட பசுமைத்தாயகம் பொறுப்பாளர் கவுதம் மாவட்ட துணை செயலாளர் இளங்கோ மணிகண்டன் ஒன்றிய செயலாளர் ராஜன் ஒன்றிய கவுன்சிலர் பழனிச்சாமி செல்வமணி செல்லதுரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் செல்லதுரை பாஸ்கரன்விக்னேஷ் பாக்கியராஜ் துணைத் தலைவர் ராஜா சிவ இளங்கோ ஆகியோர் பங்கேற்றனர்.