


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் புயலைக் கிளப்பிய விவகாரமாக எதிர்கட்சிகளின் செல்போன்களை ஒட்டுக்கேட்ட விவகாரம் மாறியிருக்கிறது. அமித்ஷாவை ராஜினாமா செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அது பற்றிய விவரம் வருமாறு.
எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி மம்தா பானர்ஜி உள்ளிட்டவர்களின் செல்போன்களை பிரதமர் மோடி, உள்ளிட்டோர் ஒட்டுகேட்டதை கண்டிக்கும் வகையிலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தலைமையில் குமரி ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

