ஜார்கண்ட் மாநிலத்தில் ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த திருச்சி மாவட்டத்தில் பிறந்த அருட்திரு. ஸ்டேன்ஸ் சுவாமி மும்பை நீதிமன்ற காவலில் இருந்தபோது கடந்த ஜூலை 5ம் தேதி இறந்தார். மும்பை நீதிமன்ற காவலில் இறந்த ஸ்டேன் சுவாமியின் அஸ்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அனைத்து தரப்பு மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றன.
நீதிமன்ற காவலில் கொலை செய்யப்பட்ட மனித உரிமை போராளி ஸ்டேன் ஸ்வாமி அவர்கள் இறப்புக்கு நீதி கேட்டு நெல்லை வண்ணாரப்பேட்டையில் அனைத்து கட்சி சார்பில் மக்கள் இயக்கம் மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் சமய நல்லிணக்க மனித உரிமைகள் காப்பாளர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாளையங்கோட்டை கத்தோலிக்க திருச்பை மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோணி சாமி தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ. எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன்,மதிமுக மாவட்ட செயலாளர் நிஜாம், சிபிஐஎம் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், மாவட்ட சிறுபான்மை நலக்குழு பழனி, சிபிஐ மாவட்ட செயலாளர் காசி விஸ்வநாதன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எல்கேஎஸ் மீரான், மனித நேய மக்கள் கட்சி ரசூல் மைதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயலாளர் ஹயாத் முகமது. தலைவர் கனி, வக்கீல் அமல்ராஜ், பொருநை மக்கள் இயக்கம் நாறும் பூநாதன் தென்காசி மாவட்ட மக்கள் ஒற்றுமை மேடை குணசீலன் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.