• Wed. Apr 24th, 2024

சட்டசபையில் புயலைக் கிளப்பிய குட்காவும் திமுக அரசின் தடையும்…..

Byadmin

Jul 23, 2021

குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

குட்கா பான்மசாலா போன்ற போதை வஸ்துகளுக்கு 2013ம் ஆண்டு தமிழ்நாடு அரசு தடை விதித்தது. ஆனால் பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டு  வ்நதது.  இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் குட்கா பொருட்களை தடை செய்வது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்  நடைபெற்றது.

அரசு அதிகாரிகள் மற்றும் வணிகர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். குட்கா பான்மசாலா பொருட்கள் விற்கும் கடைகளுக்கு சில் வைக்கவும் தண்டனையை அதிகரிக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டார்.

கடந்த அதிமுக ஆட்சியில் குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ வழக்கு பதியப்பட்டு விசாரணைக்காக அப்போதைய சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோருக்கு சம்மன் வழங்கப்பட்டது. குட்கா ஆலை அதிபர்கள் மாதவராவ் உமாசங்கர்குப்தா சீனிவாசராவ் மத்திய கலால் அதிகாரி பாண்டியன் உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில் முருகன் சுகாதாரத்துறை ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லும் போது மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்றார். 2017ம் ஆண்டு 544 டன் பான்மசாலா குட்கா பொருட்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். என் மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றது என்றார். குட்காவிவகாரத்தை சட்டசபையில் திமுக கிளப்பியதற்காக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு உரிமைக்குழு அமைத்து ஸ்டாலின் உட்பட 21 திமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதனை எதிர்த்து ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்எல்ஏக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாகக்கூறி ரத்து செய்தது.

இத்தகைய சூழலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி பெறுப்பேற்ற நிலையில் குட்காவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறி;ப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *