
கோவை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்கள் உதவி மையம் பெண் உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர்கள் ஆகியோர்களுடன் இயங்கி வருகிறது. இவர்களின் பணியைப் பற்றி ஒரு நாள் பயிற்சி வகுப்பினை நேற்று கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் துவக்கி வைத்தார். இப்பயிற்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. சுஹாசினி மற்றும் சைபர் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சங்கு, குழந்தைகள் மற்றும் ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர்கள், மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் நலத்துறை, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு துறை மற்றும் ஒன் ஸ்டாப் சென்டர் ஆகிய துறை அதிகாரிகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும் தடுப்பதற்கு உள்ள சட்டங்கள் பற்றியும் பயிற்சியில் எடுத்துரைத்தனர்.
