• Fri. Mar 29th, 2024

மழை சேகரிப்பு குளம் கழிவுநீர் குளமாக மாறி வருகின்ற அவலம்!..

Byadmin

Jul 17, 2021

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட கோபாலசமுத்திரம் குளமானது 2015 அன்றைய அமைச்சர் நத்தம் விசுவநாதன் அவர்களால் மழைநீர் சேகரிப்பு குளமாக மாற்றப்பட்டது. பொதுமக்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்க வேண்டும் என்பதற்காக நிலத்தடி நீர் உயர்விற்காக இந்த கோபாலசமுத்திரம் குளத்துப் பகுதியை அன்று தூர்வாரப்பட்டு நிலத்தடி நீர் சேகரிக்கும் மையமாகவும் மழைநீர் சேகரிப்பு மையமாகவும் அமைக்கப்பட்டது. காலப்போக்கில் குளங்கள் தூர் வார படுவதில்லை இருந்தபோதிலும் அப்பகுதியில் உள்ள பழனி ரோடு, பென்சனர் தெரு, அரசு மருத்துவமனை, எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதியில் இருந்து வெளிவரக்கூடிய கழிவு நீரானது கழிவு நீரோடை வழியாக சென்றுகொண்டிருந்தது மழைநீர் சேகரிப்பு மையமான கோபாலசமுத்திரம் குளத்தின் மையப்பகுதியில் மொத்தம் 3 கிணறுகள் உள்ளன இதனால் இப்பகுதியில் உள்ள மக்களின் நிலத்தடி நீர் சிறப்பாக இருந்தது மழை பெய்தாலும் மழைநீர் சேகரிப்பு மையம் தொடங்கப்பட்ட இந்த கோபாலசமுத்திரம் குளத்தில் நீர் நிரம்புவது இல்லை இதனால்திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அப்பகுதியில் செல்லக்கூடிய கழிவுநீர் ஓடையை மழைநீர் சேகரிப்பு மையத்திற்குள் கழிவு நீரை கலந்து விட்டனர். 500 மீட்டர் சுற்றளவு கொண்ட நடைப்பயிற்சி வளாகமும் செயல்பட்டது கழிவு நீர் கலந்ததால் துர்நாற்றம் வீசத் தொடங்கியது கழிவுநீரை ,மழைநீர் சேகரிப்பு குளத்திற்கு கலப்பதற்கு அனுமதி கொடுத்தது யார் மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து மீண்டும் கழிவு நீர் கலக்காமல் மழைநீர் சேகரிப்பு குளமாக அமைய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *