

இந்த கொரோனா இரண்டாவது அலையில் நெல்லை மாவட்டத்தில் நான்காயிரம் பூக்கட்டும் தொழிலாளர்கள் கடும் பாதிப்பு…
கொரானா பரவல் தீவிரம் காரணமாக நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து உட்பட பல்வேறு சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை நேரத்தில் நெல்லை மாவட்டம் முழுவதிலும் உள்ள சுமார் நான்காயிரம் பூ கட்டும் தொழிலாளர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர் இவர்களுக்கு கொரானா நிவாரண நிதி அரசு அறிவிக்க வேண்டும் என எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்.
