• Fri. Mar 29th, 2024

கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் விக்டரி நிதி நிறுவனம் நடத்தி வரும் எம்.ஆர். கணேஷ் எம்.ஆர். சுவாமிநாதன் சகோதரர்கள் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்…..

Byadmin

Jul 26, 2021

கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் விக்டரி நிதி நிறுவனம் நடத்தி வரும் எம்.ஆர். கணேஷ் எம்.ஆர். சுவாமிநாதன் சகோதரர்கள் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கும்பகோணத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜபருல்லா பைரோஸ்பானு தம்பதியினர் 15 கோடி ரூபாய் மோசடி செய்ததாக 15.07.21 அன்று புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஹெலிகாப்டர் பிரதர்ஸ் தலைமறைவாகி விட்டார்கள். கும்பகோணத்தில் 600 கோடி ரூபாய் மெகா மோசடி, பாதிக்கப்பட்டவர்கள்வர்த்தகர்கள், பொதுமக்கள் என சுவரொட்டி ஒட்டப்பட்டு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சுவரொட்டி ஒட்டியவர்கள் யார் என்று கண்டறிந்து அவர்களிடம் வருமானவரித் துறையினர் விசாரணை நடத்த வேண்டும். 500க்கும் மேற்பட்டவர்கள் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்கள் என்று பேசப்படுகிறது. அவர்கள் முதலீடு செய்துள்ள பணம் அனைத்தும் கருப்பு பணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்கிறது. ஏனென்றால் இதுவரை யாரும் புகார் தர முன்வரவில்லை. அரசுக்கு வரி ஏய்ப்பு செய்து கருப்புப் பணம் வைத்திருந்து முதலீடு செய்தவர்களின் பெயர் பட்டியலை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். கருப்பு பணம் கொடுத்தவர்கள் அனைவரது அலுவலகங்கள், நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்த வேண்டும். கருப்பு பணத்தை மீட்டு அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும். என்ற கோரிக்கையை வலியுறுத்தி கருப்பு பணத்தை மீட்க வேண்டும் என்ற வாசகம் அடங்கிய கருப்பு உடை அணிந்து கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில செயலாளர் பாலா தலைமையில் வருமான வரித்துறை அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் குடந்தை நகர தலைவர் பிரபாகரன் மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் மாவட்டத் தலைமை ஒருங்கிணைப்பாளர் ரவி மாவட்ட பூசாரி பேரவைகள் அமைப்பாளர் கார்த்திக் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் சத்தியமூர்த்தி தஞ்சை மாவட்டச் செயலாளர் தீபக் சிவசேனா மண்டல தலைவர் வேல்முருகன் இந்து முன்னணி முன்னாள் நகர தலைவர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *