• Tue. Apr 16th, 2024

கும்பகோணம் அருகே நாதன் கோவில் கிராமத்தில் செயல்படும் நியாய விலை கடையில் ஜூலை மாதத்திற்கான அரிசி ,பருப்பு, சீனி உள்ளிட்ட, பொருட்கள் தீர்ந்து விட்டதாகக் கூறி கடையை மூடியதால் பரபரப்பு .

Byadmin

Jul 26, 2021

ஊர் இளைஞர்கள் ஒன்றுகூடி அரசு அலுவலர்களை தொடர்பு கொண்டு மூடப்பட்ட கடையை திறக்க வைத்து பொதுமக்களுக்கு அரிசி வினியோகம்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள நாதன் கோவில் கிராமத்தில் செயல்படும் நியாய விலை கடையில் ஜூலை மாதத்திற்கு உரிய அரிசி ,பருப்பு ,சீனி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் தீர்ந்துவிட்டதாகவும், இம்மாதம் வாங்காதவர்கள் அடுத்த மாதம் வாங்கிக்கொள்ளலாம் என கூறி கடையை மூடிவிட்டு மூடி விட்டதாக கூறப்படுகிறது.

இக்கடையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் அரிசி, பருப்பு ,சீனி வாங்காத நிலையில் பொருட்கள் தீர்ந்து விட்டது எனக் கூறுவதால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி இளைஞர்கள் வட்ட வழங்கல் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர்.

உடனடியாக நியாய விலை கடை ஊழியர்களை வரவழைத்து கடையில் உள்ள அரிசியை வினியோகம் செய்ய கூறியதை தொடர்ந்து பொதுமக்களுக்கு அரிசி இன்று வழங்கப்பட்டது.

எஞ்சிய சீனி, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வந்ததும்
வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏராளமானோர் தங்களுக்குரிய அரிசியை நீண்ட வரிசையில் நின்று பெற்றுச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *