• Fri. Apr 18th, 2025

குமரி மாவட்டத்தில் பகவதி வழிபாடு என்பது அன்று தொட்டு இன்றுவரை தொடர்கிறது…

Byadmin

Jul 20, 2021

குமரி மாவட்டத்தில் பகவதி வழிபாடு என்பது அன்று தொட்டு இன்றுவரை தொடர்கிறது.

கன்னியாகுமரி என்ற ஊரின் பெயர் காரணமே, கன்னியாகுமரியில் கோயில் கொண்டுள்ள கன்னி தெய்வம் பகவதியம்மன் கோயிலே காரணம்.

குமரி மற்றும் கேரள மாநிலத்திலும் கண்ணகி வழி பாடே பின்னாளில் பகவதி வழி பாடாகும் என்பது வரலாற்று பதிவு செய்துள்ளது.பகவதி வழிபாட்டின் வழியில் அவ்வையார் வழிபாடும் தொன்று தொட்டு தொடர்கிறது.

ஆடி மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை,அதனை தொடர்ந்து வரும் அனைத்து செவ்வாய்க்கிழமை களிலும் பெண்கள் அம்மன் கோவில்களில் பெண்களுக்கு மட்டுமே யான் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம்.

ஆடி மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை செண்பகராமன் புதூர் அருகில் உள்ள அவ்வையார் அம்மன் கோயிலில் பெண் பக்தர்கள் திரண்டு வந்து அவ்வையார் அம்மன் கோயில் வளாகத்தில் நூற்றுக்கும் அதிகமான அடுப்புகளில் கொழுக்கட்டை தயாரித்து அவ்வையார் அம்மனுக்கு படைத்து வழிபாடு நடத்துவது சிறப்பானது.

கோரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் இந்தாண்டு பெண் பக்தர்கள் கொழுக்கட்டை தயாரித்து வழிபடுவதற்கு தடை செய்ததால்.

கோவில் வளாகத்தில் வரிசையாக அடுப்புகள் இருக்கும் பகுதிக்கு எவரும் செல்ல கூடாது என்பதற்காக அதன் வாதல் கதவு பூட்டு போட்டு சூட்டப்பட்டுள்ளது.மேலும் அதிக கூட்டம் கூடக்கூட து என்ற மாவட்ட நிர்வாகம் ஆணையிட்டுள்ளதால் கோயிலின் உள்ளே விரல் விட்டு எண்ணும் வகையிலே பெண் பக்தர்கள் அவ்வையார் அம்மனை தரிசித்தனர். கோவில் வளாகத்தின் வெளியே குறைந்த எண்ணிக்கையில் குடும்ப உறுப்பினர்கள் தேங்காய் மற்றும் கொழுக்கட்டை படையில் இட்டு பூஜைகள் செய்ததை காணமுடிந்தது.