


தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மூன்று நாட்கள் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்த நிலையில் குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில்.சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. காலை நேரத்தில் சாரல் மழை யாக தொடங்கி நேரம் செல்ல செல்ல கன மழையாக பெய்யத் தொடங்கியது. சில பகுதிகளில் மழை விட்டு இளம் வெயிலும் உள்ளது. குமரி மாவட்டம் முழுவதும் மலைவாச பகுதிபோல் மாவட்டம் முழுவதும் இதமான குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

