

டவுன் கல்லணை அருகே உள்ள குளத்தில் தவறிவிழுந்த பசு மாட்டினை ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்ட எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் மற்றும் தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.
நெல்லை மாவட்டம் டவுனில் அய்யூப் சதாம் என்பவரின் கடை ஒன்று புதிதாக கட்டப்பட்டு வரும் நிலையில் அதன் வாயில் அருகே 10 அடி ஆழமுள்ள குளம் உள்ளது அப்பகுதியில் சென்ற பசுமாடு ஒன்று அந்தப் பள்ளத்தில் தவறி விழுந்து மூன்று நாட்களாக இந்த குளத்தில் உயிருக்கு போராடி வந்துள்ளது.
எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி அய்யூப் சதாம் தொட்டியின் உள்ளே பார்த்தபோது பசுமாடு ஒன்று விழுந்து கிடந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து பேட்டை தீயணைப்பு தலைமை காவலர் முருகன் அவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் துரிதமாக சென்ற தீயணைப்பு வீரர்கள் குளத்தின் உள்ளே உள்ள மாட்டினை கயிறு மூலம் கட்டப்பட்டு பின்னர் மேலே இழுத்து, பின் வெளியே எடுத்து காப்பாற்றினர். வெளியே வந்த மாடு நல்லமுறையில் நடந்து சென்றது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்..