தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் சிறைத்துறையில் காலியாக உள்ள 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. விருதுநகரில் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காலையில்; இருந்து ஏராளமான இளைஞர்கள் பங்கேற்க துவங்கினர். இதில் எம். அழகாபுரியைச் சேர்ந்த சங்கர்ராஜா என்பவரது மகன் மாரிமுத்து (21)வும் பங்கேற்றார். ஓட்டப்போட்டியில் பங்கேற்ற மாரிமுத்து வேகமாக ஓடிய போது எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்தார். அவரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் உடல் தகுதி தேர்வில் பங்கேற்ற இளைஞர்கள் சோகமடைந்தனர்.