பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு காங்கிரஸ் எம் பி விஜய் வசந்த் தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் கையெழுத்து இயக்கமும் நடைப்பெற்றது.
பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு விலைகளை மத்திய அரசு நாளுக்கு நாள் உயர்த்தி கொண்டே செல்கிறது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இவ்வாறு பெட்ரோல்,டீசல் ,சமையல் எரிவாயு விலைகளை தொடர்ந்து உயர்த்தி வருவதால் இல்லத்தரசிகள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனிடையே பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை உயர்த்தி பொதுமக்களை கஷ்டப்படுத்தி வரும் மத்திய அரசை கண்டித்து குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நாகர்கோயில் வடசேரி சந்திப்பில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் போராட்டமும் நடைப்பெற்றது. இதில் குமரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் மத்திய அரசை கண்டித்து கோஷங்களும் எழுப்பினார்கள்.