

மத்திய பா.ஜனதா அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கையெழுத்து இயக்க போராட்டம்
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி பல்வேறு கட்ட போராட்டங்களை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நடத்தி வருகிறது. இந் நிலையில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கல்லுகட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பம்பில் மேல்புறம் ஒன்றிய கவுன்சிலர் ரவிசங்கர் தலைமையிலும் ,படந்தாலுமூடு அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிர்புறம் உள்ள பம்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு விளவங்கோடு பஞ்சாயத்து தலைவர் லைலா ரவிசங்கர் தலைமையிலும் , நடைபெற்ற கையெழுத்து இயக்க போராட்டத்தை விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் விஜயதரணி தொடங்கிவைத்தார்.போராட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. போராட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
