கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு ரூ.4,000 ஆக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
“தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைப் பொதுத் தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் “கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்” என்று தலைப்புச் செய்தியாக கொடுக்கப்பட்டது. ஆனால் மூன்று நாட்களுக்கு முன்பு திமுக அரசினால் வெளியிடப்பட்ட செய்தி வெளியீட்டில் கரும்புக்கு டன்னுக்கு 2,900 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது கரும்பு விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கரும்புக்கான நியாயமான மற்றும் ஆதாய விலையை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிர்ணயித்து வருகிறது. இந்த வகையில், நான் முதல்வராக இருந்த காலகட்டமான 2016-2017ம் ஆண்டு கரும்பு பருவத்திற்கு நியாயமான மற்றும் ஆதாய விலையாக டன் ஒன்றுக்கு 2,300 ரூபாய் என மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்டது. அதே சமயத்தில் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பெரும்பாலான சர்க்கரை ஆலைகள் டன் ஒன்றுக்கு 2,600 ரூபாய் வழங்கியதையும், மகாராஷ்டிராவில் 2,475 ரூபாய் வழங்கியதையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிலுள்ள கரும்பு விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில், மத்திய அரசின் நியாயமான மற்றும் ஆதாய விலையான கரும்புக்கு டன் ஒன்றுக்கு 2,300 ரூபாய் என்ற விலையுடன் மாநில அரசின் பரிந்துரை விலையாக போக்குவரத்துச் செலவு 100 ரூபாய் உட்பட 550 ரூபாய் சேர்க்கப்பட்டு, ஒரு டன் கரும்பின் விலை 2,850 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.
இது 27-12-2016 நாளிட்ட செய்திக் குறிப்பின் மூலம் அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் விவசாயிகள் கரும்புக்கு டன் ஒன்றுக்கு 3,500 ரூபாய் கேட்கிறார்கள் எனச் சுட்டிக்காட்டி, விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால், அதனை எதிர்த்து திமுக போராட்டம் நடத்தும் என்றும் அறிவித்ததையும், திமுக தேர்தல் அறிக்கையில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டதையும் இந்தத் தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஆனால், தற்போது விவசாயிகள் கரும்புக்கு டன் ஒன்றுக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறி வரும் நிலையில், 2020-21ம் ஆண்டு அரவைப் பருவத்திற்கு மத்திய அரசு நிர்ணயித்த விலையான கரும்புக்கு டன் ஒன்றுக்கு 2,707 ரூபாய் 50 காசு என்பதுடன் உற்பத்தி ஊக்கத் தொகையாக 42 ரூபாய் 50 காசு மற்றும் சிறப்பு ஊக்கத் தொகையாக 150 ரூபாய் என மொத்தம் 192 ரூபாய் 50 காசு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்றும், இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 2,900 ரூபாய் கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு 08-01-2022 நாளிட்ட செய்தி வெளியீட்டின் மூலம் அறிவித்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கரும்புக்கு டன் ஒன்றுக்கு 3,500 ரூபாய் அளிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தவர்,
ஆட்சிக்கு வந்தால் கரும்புக்கு டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று எட்டு மாதங்களுக்கு முன்பு தேர்தல் அறிக்கை மூலம் வாக்குறுதி அளித்தவர், இப்போது ஆட்சிக்கு வந்தபிறகு 2,900 ரூபாய் என்று அறிவிப்பது என்பது கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் ஆகும். ‘சொல்வது ஒன்று, செய்வது ஒன்று’ என்ற அளவில் திமுக-வின் செயல்பாடு இருக்கிறது. இதற்கு அனைத்திந்திய அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சொன்னதையும், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு செய்வதையும் ஒப்பிட்டு, அதனை அரசுக்குச் சுட்டிக்காட்டி நினைவுபடுத்துவதும், அதனை நிறைவேற்ற வலியுறுத்துவதும் எதிர்க்கட்சியின் கடமை என்ற அடிப்படையில் முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு இதைக் கொண்டு வருகிறேன்.
இதில் உடனடியாக முதல்வர் தலையிட்டு, குறைந்தபட்சம் தேர்தல் வாக்குறுதியான கரும்புக்கு ஆதார விலையாக டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும் என்பதையாவது நிறைவேற்ற வழிவகை செய்ய வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் சார்பாகவும், அஇஅதிமுக சார்பாகவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


- மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் கிராமசபை கூட்டம்மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் கார்சேரி,சக்கிமங்கலம், ஆண்டார்கெட்டாரம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சிலைமான் ஊராட்சியிலும் உலக […]
- லஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு -தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைலஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாசில்தார் […]
- செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனைமாநகராட்சிக்கு வரி கட்ட மறுத்து செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனை நிர்வாகம் செவிலியர்களுக்கு புத்தி […]
- மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள போட்டி: குண்டு எறிதலில் மதுரை வீரர் புதிய சாதனை.!!புனே நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகளப்போட்டியில் மதுரை வீரர் குண்டு எறிதலில் புதிய சாதனை […]
- மதுரை ஈச்சனேரி அருகே நடந்த விபத்தில் 2 பேர் பலிமதுரை ஈச்சனேரி பேருந்து நிறுத்தம் பகுதியில் முன்னாள் சென்ற டூவீலர் மீது பின்னால் வந்த அரசு […]
- மதுரை வில்லாபுரத்தில் இடி, மின்னல் தாக்கி வீடுகள் சேதம்வில்லாபுரம் பகுதியில் அருகருகே இரண்டு வீட்டில் இடி, மின்னல் தாக்கி வீட்டின் கான்கிரீட் மேல்கூரை இடிந்து […]
- எட்டு ஆண்டுகள் என்னோடு பயணித்த அனைவருக்கும் நன்றி -விஜய்விஷ்வாதமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக வெள்ளித்திரையில் தடம் பதித்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 142: வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்பாணி கொண்ட பல் கால் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் வெற்றி பெறுவது எப்படி? பலமுறை ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒரு வீரனிடம், “ஓட்டப்பந்தயத்தில் வெற்றி […]
- பொது அறிவு வினா விடைகள்
- பாறைப் பட்டி கன்னிமார் கோயிலில் பூஜைமதுரை மாவட்டம், காஞ்சரம்பேட்டை அருகே பாறைபட்டியில் உள்ள பேசும் கன்னிமார் கோயிலில், பங்குனி மாத சர்வஅமாவாசை […]
- பிரதமர் மோடியுடன் பானிபூரி சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்..!இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜப்பான் பிரதமர், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் டெல்லியில் உள்ள புத்தர் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு உதகையில் கிராமசபை கூட்டம்உலக தண்ணீர் தினமான இன்று நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலும் மன்ற […]
- இன்று உலக தண்ணீர் தினம்… நீரின்றி அமையாது உலகு‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் […]
- சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கோலப்போட்டி..!தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை […]