• Wed. Mar 19th, 2025

ஓலிம்பிக் போட்டியில் சீனா முதல் பதக்கம் வென்றது…

Byadmin

Jul 24, 2021

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா கோலகலமாக நேற்று தொடங்கியது. கொரோனா அச்சம் காரணமாக பார்வையாளர்கள் இன்றி கடும் கட்டுப்பாடுகளுடன் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா உள்பட 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்இ வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 127 வீரர்இ வீராங்கனைகள் 18 போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இந்தநிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் மகளிர் துப்பாக்கிச்சுடுதல் 10 மீ ஏர்ரைபிள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் அபூர்வி தோல்வி அடைந்துள்ளனர். தனிநபர் தகுதிச்சுற்றில் இளவேனில் 16 அபூர்வி சண்டேலா 36 வது இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுத்தலில் முதல்நிலை வீராங்கனையான இளவேனில் தோல்வியால் இந்திய ஏமாற்றம் அடைந்துள்ளது. தொடர்ந்து நடைபெற்ற வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

சிறப்பாக விளையாடிய இந்திய அணியை சேர்ந்த தீபிகா குமாரி பிரவீன் ஜாதவ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். மேலும் காலிறுதியில் தென்கொரிய இணையை இந்தியவின் தீபிகா குமாரி பிரவீன் ஜாதவ் கோடி எதிர்கொள்கிறது.
துடுப்பு படகு ஆடவர் இரட்டையர் தகுதிச்சுற்றில் இந்தியவீரர்கள் அரவிந்த் லால் அர்ஜுன் சிங் தோல்வி அடைந்துள்ளனர். ஆடவர் இரட்டையர் ஸ்கல்ஸ் பிரிவில் அரவிந்த் லால்அர்ஜுன் சிங் 5-வது இடம் பிடித்து தோல்விடைந்துள்ளனர். தோல்வியடைந்த போதிலும் ரெப்பசேஜ் என்னும் மறுவாய்ப்பு சுற்றில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்க சற்று வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் சீன வீராங்கனை யாங் தங்கம் சென்று அசத்தியுள்ளார். துப்பாக்கிச் சுடுதலில் ரஷ்யா 2-வது இடத்தையும் சுவிட்சர்லாந்து 2-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கம் பதக்கத்தை சீனா வென்றுள்ளது.