


ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதற்கு அமெரிக்காவே காரணம் என ஆப்கன் மக்கள் வெள்ளை மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றினர். இதனால் அங்கு அசாதரண சூழல் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் இந்த சூழலை தலிபான்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் ஆப்கானில் ஏற்பட்டுள்ள சூழலுக்கு அமெரிக்காவே காரணம் என அமெரிக்கா வாழ் ஆப்கானிஸ்தான் மக்கள் வெள்ளை மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்களை ஏமாற்றி விட்டார் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

ஆப்கானில் தற்போது ஏற்பட்ட நிலைமைக்கு காரணம் பைடன் மட்டும் என்றும், உலக நாடுகள் ஆப்கானிஸ்தானை கைவிட்டு விட்டதாக குற்றம்சாட்டினர்.

