

டெல்லியில் ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டத்தில் இளைஞர் காங்கிரசார் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. முன்னதாக இளைஞர் காங்கிரசாரிடையே ராகுல்காந்தி பேசியதாவது.
நாட்டின் பிரதமர் மோடி வேலையின்மையைப் பற்றி வாய் திறப்பதில்லை. கடந்த 7 ஆண்டுகளில் 12 கோடி இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. எதிர்கட்சியினரை வேவு பார்க்கும் பெகாசஸ் விவகாரம் இந்த நாட்டுக்கு ஒரு அவமானம். நீங்கள் உண்மையை பேசினால் உங்கள் செல்போனுக்குள் பெகாசஸ் வந்துவிடும் என்று ராகுல் காந்தி எச்சரித்தார்.

