• Fri. Apr 19th, 2024

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் அளிக்கபட்ட மனு நிராகரித்தற்கான காரணம் கேட்டு தம்பதியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு-

Byadmin

Jul 20, 2021

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் மாற்றுதிறனாளி மகனுக்காக உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் அளிக்கபட்ட மனு நிராகரித்தற்கான காரணம் கேட்டு தம்பதியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு-
மாற்றுத்திறனாளி குழந்தையுடன் மனு அளிக்க வந்த தம்பதியினரை காரில் இருந்து இறங்கி வந்து மனுவிற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து கையோடு அழைத்து சென்ற மாவட்ட மாற்றுதிறனாளி அலுவலர்-இந்த செயலுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு..

கன்னியாகுமரி மாவட்டம் குழிக்கோடு அருகே நெடுவிளையை சேர்ந்தவர் டென்னீஸ்குமார் இவரது மனைவி மேரிசுஜா ,கட்டிட தொழிலாளயான டென்னீஸ்குமார் தம்பதியருக்கு 9 வயதில் டேனிஸ்டேனோ என்ற மகனும் 5 வயதில் டேனிஸ்டெனிஸா என்ற மகளும் உள்ளனர். கடந்த 2012 வருடம் மார்த்தாண்டத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் மூத்த குழந்தை டேனிஸ்டனோ பிறந்துள்ளார்.இதில் குழந்தை கண்பார்வை இழந்துள்ளது.இதற்கு தவறான மருத்துவ சிகிட்சை தான் காரணம் எனவும் குழந்தையின் பார்வை மற்றும் கைகால்கள் செயலிழந்ததிற்கு காரணம் கேட்டு நீதி விசாரணை நடத்த டென்னிஸ் குமார் தம்பதியினர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதேபோல் பிரதமர் அலுவலகத்திலும் மனு அளித்தனர்.அதை தொடர்ந்து பிரதமர் அலுவலகத்திலிருந்து மாநில சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் மருத்துவகுழு அமைக்கபட்டு விசாரணை நடைபெற்று வருகிறதாக தெரிகிறது.இந்நிலையில் கடந்த தேர்தலுக்கு முன்பு நாகர்கோவிலில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலினிடம் டென்னிஸ் குமார் தம்பதியர் நீதி விசாரணை கேட்டு மனு அளித்தனர்.அதற்கு தற்போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் வழங்கிய அந்த மனு நிராகரிக்கபட்டுள்ளது என்று தகவல் பெறப்பட்டதை தொடர்ந்து இன்று மாற்றுத்திறனாளியான தனது குழந்தையை அழைத்து வந்து மனு நிராகரித்ததற்கான காரணம் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எதார்த்தமாக வந்த மாற்றுதிறனாளி அலுவலர் சிவசங்கரன் மாற்றுதிறனாளி குழந்தையுடன் நின்ற தம்பதியை பார்த்து வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கி வந்து சம்பவத்தை கேட்டு அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்து முதற்கட்ட நடவடிக்கை எடுக்க குழந்தைக்கு ஆதார் எடுக்க அழைத்து சென்றார்.பின்னர் குழந்தைக்கு மாதம் மாதம் கிடைக்கும் நிவாரண தொகை கிடைக்க வழிவகை செய்வதாக உறுதியளித்தார்.இதை நேரில் பார்த்த சமூக ஆர்வலர்கள் அவரின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர்.இதானல் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *