


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த மருதம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 21 கட்டிட தொழிலாளி. இவர் தனது உறவினர் மகளான ஐந்தாங்கட்டளை கிராமத்தை சேர்ந்த சுமதி (19) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இந்த விஷயம் சுமதி வீட்டிற்கு தெரியவந்தது. பெண்ணின் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று முன்தினம் ஜூன் 24ம் தேதி சுமதிக்கு பிறந்தநாள் 19 வயது நிறைவடைந்தது. இ;ந்தநிலையில் நேற்று ஜூன் 25ம் தேதி சுமதி வீட்டில் இருந்து வெளியேறினார். பெற்றோர் மகளை தேடி வந்தனர். இதை தொடர்ந்து காதல் ஜோடி குமார்- சுமதி திருமணம் செய்து கொண்டு ஆலங்குளம் காவல் நிலையத்தில் இன்று தஞ்சம் அடைந்தனர். இருவரும் திருமண வயதை அடைந்ததால் காதல் ஜோடியை போலீசார் வாழ்த்தி அனுப்பி வைத்தனர். ஆலங்குளம் காவல நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

