தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா அளவில் முதல்முறையாக கிரிக்கெட்டுக்காக விக்டோரியன் கிரிக்கெட் அகாடமி பயிற்சி மையம் துவக்க விழா நடைபெற்றது .விழாவிற்கு ஆசிரியர் சதீஷ் தலைமை தாங்கினார் .மதுரை அகாடமி தலைமை பயிற்சியாளர் கோபி கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பிரமுகர் லதா அவர்கள் ரிப்பன் வெட்டி மையத்தை தொடங்கி வைத்தார்.
வர்த்தகப் பிரமுகர்கள் வினோத், ஜிஎஸ்எல். பாலாஜி ஆகியோர் பயிற்சியை துவக்கி வைத்தனர். இந்த வலைப் பயிற்சியில் ஆறு வயது முதல் இளைஞர்கள் அனைவரும் பயிற்சி பெறலாம் .காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் ,மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் வலை பயிற்சி, உடற்பயிற்சி, கிரிக்கெட் குறித்த நுணுக்கங்கள் கற்றுக்கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணமாக மாதத்திற்கு 500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்த விழாவில் தாலுகாவிற்கு உட்பட்ட ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் பங்குபெற்றனர் .பயிற்சியாளர் நாகேஸ்வரன் நன்றி கூறினார்.