

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலிலுள்ள துர்க்கை அம்மன் உலகப்புகழ் பெற்றதாகும்.
இந்த துர்க்கை அம்மன் சன்னதிக்கு வருடம் தோறும் ஆடி மாதம் வெள்ளிக் கிழமை ராகு காலத்தில் சிறப்பு அபிஷேகம் அர்ச்சனைகள் நடைபெறுவது வழக்கம்.
இதனால் அம்மனை தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனை தரிசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை முன்னால் உணவுத் துறை அமைச்சரும், நன்னிலம் தொகுதி எம்எல்ஏவான காமராஜ் பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வந்தார். கோவில் முழுவதும் சுற்றி வலம் வந்த அவர் அனைத்து சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டு சென்றார். அவருடன் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

