• Wed. Feb 19th, 2025

அ.தி.மு.கவின் முகக் கவசம் ஊழல் வெளிக்கொண்டு வருவோம் மா.சுப்பிரமணியம் பேட்டி….

Byadmin

Jul 26, 2021

கடந்த ஆட்சியில் அ.தி.மு.க அரசு வழங்கிய போக்குவரத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைகளில் 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 பெயர்கள் உள்ளன. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு முகக்கவசம் என்கிற கணக்கில் மொத்தம் 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 முகக்கவசங்கள் கொடுக்க நடவடிக்கை எடுத்தது அதிமுக அரசு.

சென்னை வழங்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “முகக்கவசம் தான் கொரோனாவுக்கு தற்போதைய தீர்வு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கிய இலவச முக கவசங்கள் தரமற்றவை. குறைந்த விலைக்கு வாங்கி மக்களுக்கு வழங்கப்பட்ட முகக்கவசத்தால் எந்த பலனும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

பாதுகாப்பான முககவசங்களை வழங்காமல் காடா துணியில் தயாரித்ததை வழங்கியுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.