

அழகர் கோவிலில் பக்தர்களின்றி நடைபெற்ற ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றம்….
மதுரை மாவட்டம் அழகர் கோவில் ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் நடைபெறும் பிரம்மோற்சவம் நிகழ்ச்சி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக இன்று தொடங்கியது.
தென் மாவட்ட மக்களின் குலதெய்வமாக விளங்கும் கூடிய கள்ளழகர் கோவிலில் ஆடிப்பெருந் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும்.இதில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தில் தென் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து பெருமாளை வழிபட்டு செல்வர்.
இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஆடித் திருவிழா ரத்து செய்யப்பட்டு அழகர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது, அதேபோல் இந்த ஆண்டும் கொரானா இரண்டாவது அலை காரணமாக ஆடித் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு ஆகம விதிகளின்படி பரிகார பூஜைகள் கோவில் வளாகத்திலேயே நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
அந்தவகையில் இன்று மதுரை மாவட்டம் அழகர் கோவில் கோவில் வளாகத்தில் ஆடி திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் மிகச் சிறப்பாக பக்தர்கள் அனுமதி இல்லாமல் கோவில் அர்ச்சகர்கள் பணியாளர்கள் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதனையடுத்து பூதேவி ஸ்ரீ தேவி சகிதமாக எழுந்தருளிய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவில் நிருவாக அதிகாரி அனிதா உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.
