• Fri. Apr 19th, 2024

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்து மீன்பிடி இறங்குதளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்….

Byadmin

Jul 16, 2021

மாவட்டம் மண்டபம் , குந்துகால் , இராமேஸ்வரம் மற்றும் மூக்கையூர் பகுதியில் மாண்புமிகு மீன்வளம் , மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்து மீன்பிடி இறங்குதளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார் .

இராமநாதபுரம் மாவட்டம் , மண்டபம் , குந்துகால் , இராமேஸ்வரம் மற்றும் மூக்கையூர் பகுதியில் இன்று ( 16.07.2021 ) மாண்புமிகு மீன்வளம் , மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் , மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்து மீன்பிடி இறங்குதளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார் . மீன்வளம் , மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை ஆணையர் முனைவர் மு.கருணாகரன் , இ.ஆ.ப . , அவர்கள் , மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா , இ.ஆ.ப . , அவர்கள் , கூடுதல் ஆட்சியர் / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.பிரவீன்குமார் , இ.ஆ.ப . , அவர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் ( இராமநாதபுரம் ) , திரு.செ.முருகேசன் அவர்கள் ( பரமக்குடி ) , உட்பட பலர் உடனிருந்தனர் . தொடர்ந்து , மாண்புமிகு மீன்வளம் , மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : மாண்புமிகு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மீனவர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் தந்து அவர்கள் வாழ்கை தரம் உயர்வு பெற வழிவகை செய்தார்கள் . மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள் வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் மீனவர்களுக்கான குறைகளை நிவர்த்தி செய்து அவர்களின் வாழ்வு மேலும் உயர்வு பெறும் வகையில் பல்வேறு சலுகைகள் அளிப்பதற்காக மீனவ கிராமங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி அவர்கள் குறைகளையும் , கோரிக்கை மனுக்களையும் பெற்று தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார்கள் . அதன்படி நான் இன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் , குந்துகால் மற்றும் இராமேஸ்வரம் மற்றும் மூக்கையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேரடியாக சென்று மீனவ மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறியப்பட்டது . தமிழக முதலமைச்சர் அவர்கள் தான் முதல்வராக பொறுப்பேற்ற போது தமிழகத்தில் கொரானா நோய் தாக்காம் அதிகம் காணப்பட்டது . மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மேற்கொண்ட சிறந்த நடவடிக்கையினால் கொரானா நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து தற்போது மிகவும் குறைந்த நிலையில் உள்ளது . தற்போது உள்ள சூழ்நிலையில் மீனவர்களின் வாழ்வு வளம்பெற அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது . மீனவர்களின் கோரிக்கையினை ஏற்று இப்பகுதிகளில் தூண்டில் வளைவு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் குந்துகாள் மீன்பிடி இறங்கு தளம் துறைமுகம் அளவில் உயர்த்தவும் மஸ்வரம் மீன்பிடி துறைமுகம் தரம் உயர்த்துவதற்கும் , மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் . மீன்பிடி தடைகாலத்தில் நிவாரணம் உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . மீனவர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்கள் கிடைக்கவும் , மீன் ஏற்றுமதிக்கு தேவையான சேமிப்பு கிடங்கு வசதிகளையும் ஏற்படுத்தவும் மேலும் திருநெல்வேலி , கன்னியாகுமரி தூத்துக்குடி பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 25 விலையில் 300 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது .என்றார் பின்னர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *