பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி அரியலூர் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை தினமான ஜூலை 21-ஆம் தேதி கான இன்று அரியலூர், ஜெயங்கொண்டம், திருமானூர், செந்துறை, உடையார்பாளையம், விக்கிரமங்கலம், புதுச்சாவடி, ஆண்டிமடம் உள்ளிட்ட 25 இடங்களில் பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் காலை கொண்டாடினர்.