

தலைவர் கலைஞர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான ரூபாய் 144000 (ஒரு லட்சத்தி நாற்பத்தி நான்காயிரம்) க்கான 150 ஆக்சிஜன் அளவை அறியும் கருவியை (Pulse oxsy meter) தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர்.பொ. சிவபத்மநாதன் மாவட்ட ஆட்சியர் கோபல சுந்தர ராஜிடம் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் சீனித்துரை, அழகுசுந்தரம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், வழக்கறிஞரணி, வேல்சாமி, ஜெயக்குமார், பிரபாகரன், விவசாய அணி சாமித்துரை, இளைஞரணி பொன் செல்வன், கிருஷ்ணகுமார், தகவல் தொழில்நுட்ப அணி, சுந்தரபாண்டியன், சுரேஷ்கண்ணா, காசி கிருஷ்ணன், மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
