மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த ரகுபதி தனது குடும்பத்துடன் மண்ணெண்ணெய் கேனுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் மண்ணெண்ணெய் கேன்னை பறிமுதல் செய்து தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர் பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து பின்னர் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறியது மருதூர் கிராமத்தில் பூர்வீகமாக குடியி ருந்து வருகிறேன் எனது பெயரில் உள்ள பட்டா நிலத்தில் உள்ள பழைய ஓட்டு வீடு இடித்து புது வீடு கட்டி வருகிறேன் இந்த நிலையில் என் மீது முன்விரோதம் கொண்டுள்ள எங்கள் ஊரைச் சேர்ந்த தற்போது ராமநாதபுரம் நீதிபதியாக பணிபரிந்து வரும் தனியரசு என்பவர் வீட்டை கட்ட விடாமல் தடுத்து வருகிறார் என் மீதும் டிஆர்ஓ இடம் பொய்யான தகவலைக் கூறி மனு ஒன்றை அளித்து அதற்கு இடைக்கால தடை என்று கூறி நீதிபதி தனது அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தி இடைக்கால தடை உத்தரவை பெற்று வீடு கட்ட விடாமல் தடுக்கிறார் அதுமட்டுமின்றி அதிகாரிகளை வைத்தும் மிரட்டல் விடுத்து வருகிறார் வறுமை நிலையிலுள்ள கூலித் தொழிலாளியான என் உயிரை காப்பாற்றி என் பட்டா இடத்தில் வீடு கட்ட அனுமதி வேண்டியும் தன்னுடைய நீதிபதி பதவியை தவறாக பயன்படுத்தும் தனியரசு மீது தக்க நடவடிக்கை எடுக்கும் வேண்டும் மனு அளித்துள்ளதாக கூறினார்…