இயக்கத்தில் தடம் மாறாத தடுமாறாதவர் மதுசூதனன் அதிமுக இரங்கல் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவையொட்டி கட்சியின் செய்தி தொடர்பாளரும் இலக்கிய அணி செயலாளருமான வைகைச்செல்வன் அதிமுவின் இரங்கல் செய்தியை அரசியல் டுடேவுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
மதுசூதனன் மறைவு குறித்து அவர் கூறிய ஆடியோ தகவல் வருமாறு.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத்தலைவர் மதுசூதனன் இறந்துவிட்டார். அவரது மறைவு அதிமுகவிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு சொல்லொண்ணா துயரத்தையும் ஆற்றொண்ணா வேதனையும் தருகிறது அவரது மறைவு. அதிமுகவில் 1972ல் தலைவர் எம்.ஜி.ஆரோடு உடனிருந்து கழகப்பணியாற்றிவர். அவரது தொண்டர்களில் ஒருவராக கட்சியின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டு ரசிகர் மன்றத்தலைவராக தன்னை பிணைத்துக்கொண்டு இந்த இயக்கத்தின் ;வளர்ச்சிக்கு வித்தாக நின்றவர் விதையாக நின்றவர் உரமாக நின்றவர் 1982ம் ஆண்டு சட்டமன்ற மேலவையில் பணியாற்றிவர். வடசென்னையில் அடையாளமாக முகமாக அதிமுகவின் தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்தவர் அருமை அண்ணன் மதுசூதனன். இப்படிப்பட்ட ஒருவர் எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு புரட்சித்தலைவி அம்மாவுடன் நின்று அவருடைய விசுவாசமிக்கவராக திகழ்ந்து 1991ல் ஆர்.கே.நகரில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் கைத்தறித் துறை அமைச்சராகவும் பணியாற்றிவர். அதன் பிறகு நீண்ட நெடிய காலம் அவைத்தலைவராக பணியாற்றியவர். இந்த இயக்கத்தின் தடம் மாறாத தடுமாறாத ஒருவராக இயக்கத்தில் அர்ப்பணித்துக்கொண்ட ஈடு இணையற்ற ஒருவர் மறைந்துவிட்டார் என்பது வேதனையளிக்கக்கூடிய ஒன்றாகும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அவருக்காக ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் வீர வணக்கத்தையும் பதிவு செய்கிறது.