• Thu. Apr 16th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

தங்கத்தை தட்டி வந்த தங்கங்கள்!..

By

Aug 14, 2021

இந்திய வீராங்கனைகள் பிரணீத் கவுர், பிரியா குர்ஜார் மற்றும் ரிதுவர்ஷினி செந்தில்குமார் ஆகிய மூவரும் சிறப்பாக அம்பு எய்து உலக சாதனை படைத்தனர்.
போலந்து நாட்டின் ரோக்லா நகரில் உலக இளையோர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகினறன. இதில் மகளிருக்கான காம்பவுண்ட் கேடட் பிரிவில் இந்திய வீராங்கனைகள் பிரணீத் கவுர், பிரியா குர்ஜார் மற்றும் ரிதுவர்ஷினி செந்தில்குமார் ஆகிய மூவரும் சிறப்பாக அம்பு எய்து அசத்தினர். இறுதிச்சுற்றில் இவர்கள் 228-216 என்ற புள்ளிகள் கணக்கில் துருக்கி அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றனர்.

தகுதிச் சுற்றில் இவர்கள் மூவரும் அணியாக மொத்தமுள்ள 2160 புள்ளிகளுக்கு 2067 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை படைத்தனர். இந்தப் பிரிவில் அமெரிக்க வீராங்கனைகள் 2045 புள்ளிகள் பெற்றதே முந்தைய உலக சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை இந்திய வீராங்கனைகள் முறியடித்தனர்.